''வீட்டம்மா பெயர்ல பங்களா கட்டிட்டு இருக்காரு பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில இருக்கிற அதிகாரியை தான் சொல்றேன்... அவருக்கு ஏற்கனவே சொந்த வீடு இருக்குது பா...
''இப்ப, 3,026 சதுர அடியில, 3 கோடி ரூபாய் செலவுல, தன் மனைவி பெயர்ல பிரமாண்ட பங்களா கட்டிட்டு இருக்காரு... இதுக்கு, நகராட்சி அதிகாரிகளிடம் அவர் எந்த அனுமதியும் வாங்கலை பா...
''இப்படி, 3 கோடி ரூபாய்க்கு பங்களா கட்டுற அளவுக்கு அவருக்கு வருமானம் எங்க இருந்து வந்துச்சுங்கிறது மர்மமா இருக்குது... 'இது பத்தி, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிச்சா, நிறைய உண்மைகள் வெளிவரும்'னு தகவல் உரிமை ஆர்வலர்கள் சொல்றாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''வரதராஜன் ஊருக்கு போயிட்டு வந்தீரே... தோப்பனார் நன்னா இருக்காரோன்னோ...'' என, நண்பரிடம் விசாரித்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.