சேலம்: சேலத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்சியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கான கூட்டத்தை பார்த்து
விட்டு, பேசுவது தெரியாமல், பழனிசாமி உளறி வருகிறார். தி.மு.க., அரசு பழனிசாமியை கைது செய்யும் வரை இவ்வாறு தான் சென்று கொண்டிருக்கும்.
கர்நாடகா தேர்தலில், 2 சீட் கேட்டோம் கொடுக்கவில்லை. ஆனால், லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு, 20 முதல், 25 சீட் வேண்டும் என கேட்பதாக செய்தி வெளியாகிறது. அந்த வேட்பாளர்களை நிறுத்த, பா.ஜ.,வுக்கு ஆட்கள் இருக்கிறார்களா என தன்னிலை அறிந்து அண்ணாமலை பேச வேண்டும்.
எதிர்காலத்தில் கூட்டணி அமைந்தால், பன்னீர்செல்வம் தலைமையில் தான் அமையும். சேலத்தில் அவரது தலைமையில் மாநாடு நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.