- நமது நிருபர் குழு -
காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை வனச்சரகத்தில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணயில் ஈடுபட்டனர். குறிப்பாக கண்ணப்பாடி, கொலவூர், சுரக்காப்பட்டி, கொண்டையனுார், சுனைப்பாடி, கரடியூர் பகுதிகளில், வனத்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையை நடத்தினர்.
கொளத்துார் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் பாலமலை மக்களிடம், சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமை குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தினர். நேற்று மேட்டூர் அணையோரம் உள்ள கோட்டை மடுவு பகுதியில், 50 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன்மலை,
கும்பபாடியில் வாழப்பாடி டி.எஸ்.பி., ஹரிசங்கரி தலைமையில் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, கும்பபாடி நீரோடையில் இருந்த, 200 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். சாராயம் காய்ச்ச வைத்திருந்த அடுப்புகள், சாராயத்தை அழித்தனர்.
பனமரத்துப்பட்டி வட்டார மலைக்கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறா என, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வெளியாட்களில் நடமாட்டம், வாகன போக்குவரத்து, வெளியிலிருந்து கொண்டு வரப்படும் பொருட்கள், பழைய சாராய குற்றவாளிகளின் நடவடிக்கை என, கிராம மக்களின் உதவியுடன் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
விற்றவர்கள் கைது
கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கெங்கவல்லி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆணையாம்பட்டியில் கள்ளச்சாராயம் விற்ற ராஜேந்திரன், 41, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 10 லிட்டர் சாராயம், 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட்டை பறிமுதல் செய்தனர். பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறை, பூண்டிக்காடு பகுதியில் நேற்று கருமந்துறை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சாராயம் விற்ற கள்ளக்குறிச்சி, வெள்ளிமலை, மணியார்பாளையத்தை சேர்ந்த, மாரி, 40, என்பவர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார். அவர்
விற்பனைக்கு வைத்திருந்த, 40 லிட்டர்
சாராயத்தை பறிமுதல் செய்தனர்.