ஈரோடு: -வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில், 2022--23ம் கல்வியாண்டில் நடந்த பிளஸ் 2 வாரியத் தேர்வில், மாணவ, மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சஞ்சய்கண்ணா - 483/500, லக்ஷிதா போத்ரா - 476/500, கவின்- 473/500, ஸ்ரீசுபாஷினி, ஜெயந்த் 470/500, அனிஸ் 467/500 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பள்ளி தலைவர் ஜெயக்குமார், தாளாளர் சந்திரசேகர், வேளாளர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், அருண், ராசமாணிக்கம், வேலுமணி மற்றும் பள்ளி முதன்மை முதல்வர் நல்லப்பன், பள்ளிஆலோசகர் பிரேமலதா, முதல்வர் பிரியதர்ஷினி, துணை
முதல்வர் மஞ்சுளா, மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.