கோலியனுாரில் காலை உணவு திட்டம் செயல்படுத்தும் 5 ஊராட்சிகளில் உணவு தயாரிப்பது தொடர்பாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தினை முதல் கட்டமாக 5 ஊராட்சிகளில், வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக காலை உணவு திட்டம் செயல்படுத்தும் 5 ஊராட்சிகளில் காலை உணவு தயாரிப்பது தொடர்பாக, கோலியனுாரில் கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன் தலைமையில் நேற்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், கோலியனுார் வட்டாரத்தில் உள்ள துவக்கப் பள்ளி உணவு சமைக்கும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்களுக்கு, வட்டார அளவிலான உணவு சமைக்கும் பயிற்சியை கூடுதல் கலெக்டர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு), மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர்கள், கோலியனுார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.