பெங்களூரு: கவர்னர் தவார் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
சித்தராமையா. அவருடன் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ள சிவகுமாரும் சென்றிருந்தார்.
![]()
|
கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றது. இருப்பினும் முதல்வர் யார் என்பதில் தேர்வு செய்வதில் குழப்பநிலை நீடித்து வந்தது. இந்நிலையில் முதல்வராக சித்தராமையாவும் , துணை முதல்வராக சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம் கடந்த நான்கு நாட்களாக நீடித்து வந்தகுழப்ப நிலை முடிவுக்கு வந்தது.
இதனிடையே முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் இன்று இரவு கவனர்ரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும் படி உரிமைகோருவதற்காக சந்திக்க உள்ளனர்.
![]()
|
காங்.,எம்.எல்.ஏக்கள் கூட்டம்
இதனிடயேதேர்ந்தெடுக்கப்பட்ட காங்., எம்.எல்.ஏக்களின் கூட்டம் பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் சித்தராமையா, மற்றும் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சித்தராமையா தேர்வு
பெங்களூரூவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா தேர்வானார். அதை தொடர்ந்து ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்த கர்நாடக கவர்னர் தவார் சந்த் கெலாட்டை சித்தராமையா, சிவகுமார் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆட்சி அமைக்க உரிமை கடிதத்தை கொடுத்தனர்.