புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 1,100 லிட்டர் சாராய ஊறலை அழித்து, இருவரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், நேற்று வடகாடு போலீசார் மற்றும் ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீ சார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், கருக்காகுறிச்சி தெற்கு கிராமத்தில், 1,100 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். மேலும், சாராயம் தயா ரிக்க பயன்படுத்திய பேரல் போன்றவற்றை தீயிட்டு எரித்தனர்.
பின்னர், கருக்காக்குறிச்சியைச் சேர்ந்த செல்வம், 24, அரசு, 18, ஆகிய இருவரையும் கைது செய்து, ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.