விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேரை புதிய உறுப்பினராக சேர்த்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதன்படி, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், முதல் கட்டமாக ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 678 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கான சேர்க்கை படிவங்கள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கட்சியின் அமைப்பு செயலாளர் பாரதி, அலுவலக மேலாளர் ஜெயக்குமார் ஆகியோரிடம், கட்சியின் துணை பொதுச்செயலாளர் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன் உடனிருந்தனர்.