விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் முண்டியம்பாக்கம், ஒரத்துார், தும்பூர், அசோகபுரி வேலியேந்தல் ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளம் துார் வாரும் பணி, சிமெண்ட் சாலை, பள்ளி கழிவறை, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வளர்ச்சிப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை புகழேந்தி எம்.எல்.ஏ., ஆய்வு செய்து விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவி துரை, துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, பி.டி.ஓ.,க்கள் சுமதி, முபாரக் அலி பேக், ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, கருணாகரன், நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் ரவி, ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், கண்காணிப்பு குழு எத்திராசன், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தில்குமார், செல்வம், மாவட்ட பிரதிநிதி வேல்முருகன்,கிளைச் செயலாளர் சுதாகர், சங்கர், அன்பு, ஊராட்சி செயலாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.