விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கோவில்களுக்கான அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும் என எம்.பி., ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பழனியை சந்தித்து அவர் அளித்துள்ள கோரிக்கை மனு:
விழுப்புரம் மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 1,068 கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது.
அறநிலையத்துறை கொடைகள் சட்டப்பிரிவின் கீழ், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில், பரம்பரை அல்லாத அறங்காவலர்களை நியமனம் செய்வதற்காக, மாவட்ட அறங்காவலர் குழு அமைக்க வேண்டும்.
அந்த குழுவானது, பிற கோவில்களில் தலா 3 பேர் கொண்ட அறங்காவலர் குழுக்கான விண்ணப்பங்களை பரிசீலித்து, பரிந்துரை செய்யும்.
மாவட்ட அளவிலான அறங்காவலர் குழு அமைக் காததால், கோவில்களில் அறங்காவலர் குழு அமைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், மாவட்ட அளவி லான அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.