கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு விவசாயிகள் கொப்பரை தேங்காயை, வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வதை தவிர்த்து, ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்கின்றனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்த ஏப்., மாதம் முதல் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், 2,500 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தில், ஒரு கிலோ கொப்பரை, 108.65 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது வரை, 1,696 மெட்ரிக் டன் கொப்பரை, 18.41 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 1211 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இத்தகவலை, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் வேளாண் உதவி அலுவலர் தமிழரசன் ஆகியோர் தெரிவித்தனர்.