ஸ்ரீபெரும்புதுார்:தாம்பரம் அருகே சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லுார் பகுதியைச் சேர்ந்த எழுமலை மகள் சுஷ்மிதா, 18, தாம்பரம் அருகே மீனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கலை கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சுஷ்மிதாவை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது. வீட்டின் அறையில் நேற்று முன்தினம் சுஷ்மிதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோமங்கலம் போலீசார் சுஷ்மிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.