காமராஜரை தோற்கடித்ததன் பலனை அனுபவிக்கிறோம்!
காமராஜரை தோற்கடித்ததன் பலனை அனுபவிக்கிறோம்!

காமராஜரை தோற்கடித்ததன் பலனை அனுபவிக்கிறோம்!

Updated : மே 20, 2023 | Added : மே 20, 2023 | கருத்துகள் (55) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:... பொ.ஜெயராஜ், பாம்பனார், கேரள மாநிலத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காமராஜர் முதல்வராக இருந்த போது, மாணவர்கள் எல்லாரும் படிக்க வேண்டும் என்று நினைத்தார். மது விற்பனை வாயிலாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை, அவமானமாக கருதினார். மக்கள் நலனே முக்கியம் என நினைத்து,


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:...


பொ.ஜெயராஜ், பாம்பனார், கேரள மாநிலத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

காமராஜர் முதல்வராக இருந்த போது, மாணவர்கள் எல்லாரும் படிக்க வேண்டும் என்று நினைத்தார். மது விற்பனை வாயிலாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை, அவமானமாக கருதினார். மக்கள் நலனே முக்கியம் என நினைத்து, மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால், நன்றி மறந்த நம் மாநில மக்கள், அவரை தேர்தலில் தோற்கடித்தனர்.latest tamil news


கழகத்தினர் ஆட்சிக்கு வந்த பின், மக்கள் நலனை பற்றி சிந்திக்காமல், நேரடியாகவோ, மறைமுகமாகவோ மது விற்பனையை ஊக்கப்படுத்தி வருகின்றனர். தடுக்கி விழுந்தால், டாஸ்மாக் கடை என்று சொல்லும் அளவிற்கு, எங்கு பார்த்தாலும் மதுக்கடைகளும், 'பார்'களும் தான் தென்படுகின்றன.

'எதற்கு இவ்வளவு மதுக் கடைகள்?' என, யாராவது கேள்வி கேட்டால், 'கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே, இவ்வளவு கடைகளை திறந்திருக்கிறோம்' என்றனர். அதுவே, உண்மையான காரணம் எனில், இப்போது எப்படி கள்ளச்சாராயம் பலரின் உயிரைப் பறித்தது?

கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக சோதனை நடத்தி, இரண்டு நாட்களில் ஏராளமான வழக்குகள் பதிந்ததை பார்க்கும் போது, காவல் துறையினர், அரசியல் (வியாதி)வாதிகளுக்கு தெரியாமல், சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றே தோன்றுகிறது.

கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த பின், சோதனை, வழக்கு, கைது என்று வேகம் காட்டும் போலீஸ் துறையினரும், முன்னரே இதைச் செய்திருந்தால், உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்காதே... இந்த விஷயத்தில், காவல் துறையினரை கட்டிப் போட்டது யார்?

வரும் முன் காப்பதே அரசின் கடமை. அதை விடுத்து, அசம்பாவிதம் நடந்த பின், சில வாரங்களுக்கு மட்டும் கடுமையான நடவடிக்கை எடுப்பது போல நடிப்பது, மக்களை ஏமாற்றும் நாடகமே அன்றி வேறில்லை. அதை விடக் கொடுமையானது, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, 1௦ லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கியது. இது, கள்ளச்சாராயம் குடிப்பதை ஊக்கப்படுத்துவது போல உள்ளது.


latest tamil news


பீஹார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த போது, 'அவர்களது குடும்பத்திற்கு, அரசு எந்த உதவியும் செய்யாது' என, ஓட்டுகளை பற்றி கவலைப்படாமல் அறிவித்தார், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார். அந்தப் பாணியை, முதல்வர் ஸ்டாலினும் பின்பற்றி இருந்தால் பாராட்டி இருக்கலாம்.

நல்ல வேளை... 'கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவோம்; 150 அடி உயரத்தில், கள்ளச்சாராயகுப்பியின் சிலையை அமைப்போம்; 'சிறந்த குடிமகன்' விருதை வழங்குவோம்' என, ஸ்டாலின் அறிவிக்கவில்லை. 'பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும்' என்பர். பொற்கால ஆட்சி நடத்திய காமராஜரை, நம் முன்னோர் தோற்கடித்த பாவத்தின் பலனை, 'திராவிட மாடல்' ஆட்சியில் நாம் அனுபவிக்கிறோம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (55)

Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-மே-202322:30:19 IST Report Abuse
Rajagopal நான் அண்ணாமலை அவர்களை காமராஜரின் மறுபிறப்பாகக் கருதுகிறேன். காமராஜர் படிப்பறியாதவர். படித்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது அவரிடம். அண்ணாமலை படித்தவர். காமராஜரைப் போலவே நேர்மையானவர். இருவரும் குணத்தில் அரசியல்வாதிகள் அல்ல. இருவரும் பிறவியிலேயே மக்களை வழி நடத்தும் தலைவர்கள். காமராஜர் இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருந்து, இந்த பகல் கொள்ளைக்காரர்கள் கையில் தமிழகம் சிக்கலால் காமராஜரின் தலைமையில் இருந்திருந்தால், நமது மாநிலம் எப்போதோ இந்தியாவிற்கே முன்னுதாரணமாக வளர்ந்திருக்கும். தமிழகத்தை வழி நடத்த மீண்டும் காமராஜர் பிறவி எடுத்து வந்திருக்கிறார். திராவிட மாயையால் குருடர்களாகி விட்ட இந்த மக்கள் அண்ணாமலையின் அருமையை அறிந்து, அவர் தலைமையை ஏற்று அவரை முதலமைச்சராக்கினால், நம் மாநிலம் உருப்படும். இல்லையேல் பெரியார் மண் என்னும் சாக்கடை கலந்த சுடுகாடாகி விடும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
20-மே-202319:59:03 IST Report Abuse
M  Ramachandran காமராஜரய் மிக கேவலமாக பேசிய மஞ்ச துண்டு முதலில் தமிழனா என்று பார்க்க வேண்டும். தமிழனுக்கு உணர்விருந்தால் பேசிய வாயின் அந்த தராதரம் தெரிந்திருக்க வேணும் உணர்ச்சி யற்ற பிண்டங்களலாய் வாய் போளந்து கைய்ய தட்டி ரசித்திருக்காது.
Rate this:
Cancel
Raj - Tamilnadu ,இந்தியா
20-மே-202319:33:58 IST Report Abuse
Raj காமராஜரையே அவரது கட்சிக்குள் பிடிக்காத சில உயர்சாதியினரும் சதி செய்ததை மறக்க முடியுமோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X