சென்னை: தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து, தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடக்கும் போராட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசுக்கு தமிழக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.
கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (மே20) பா.ஜ.,வின் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.

பாஜ.,வினர் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்படி மதுரை கலெக்டர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடக்கும் போராட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார்.