'பிச்சைக்காரன்- 2' படத்துடன் 2000 ரூபாய் நோட்டு, திரும்ப பெறப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஒப்பிட்டு நெட்டிசன்கள் பதிவிட்ட மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படுவதாக நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில் அதே நாளில் விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று பிச்சைக்காரன் - 2 திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
![]()
|
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதே நாளில் தான் விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் முதல் பாகம் வெளியானது. அதாவது, இந்த படத்தில் ஊழலை தடுப்பதற்கு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் பணப்பதுக்கலை ஒழிக்க முடியும் என கதையமைக்கப்பட்டிருக்கும். அதே கருத்தை பிரதிபலிக்கும் விதமாக தான், அந்த ஆண்டின் இறுதியில் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. இதன் காரணமாகவே இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
![]()
|
அதேபோல் இந்த ஆண்டும் மத்திய அரசு ரூ.2000 திரும்பப்பெறுவதாக அறிவித்த அதே நாளான நேற்று பிச்சைக்காரன் -2 திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் ஊழல் பற்றி பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த இரு சம்பவங்களும் திட்டமிட்டு நடக்கவில்லை என்றாலும், நெட்டிசன்கள் இந்த இரண்டு படங்களையும், மத்திய அரசின் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
![]()
|
அதேபோல் பிச்சைக்காரன் 3ம் பாகம் வெளிவரும் பொழுது மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என எதிர் நோக்கி உள்ளதாக சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் வேடிக்கையாக பதிவிட்டு வருகின்றனர்.