கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், தி.மு.க., அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் காலனியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதில் நகர இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், மாணவரணி அமைப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தொடர்ந்து, நகர இளைஞரணி மற்றும் மாணவரணி துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மேலும், தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், நந்திவரம் - -கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்று, தி.மு.க.,வின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினர்.
அதை தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.