இவள் கண்கள் இரண்டும் கயல் விளையாடும் கடல்... இதழ்கள் மெல்லினம் கொண்டாடும் ரோஜா மடல்... மென் சிரிப்பில் சிப்பிகள் சிதறடிக்கும் முத்துக்கள், காற்றில் அலையாடும் கூந்தலில் இழையோடும் பூக்களின் வாசம், இவள் அழகை அழகிதேசமே புகழ்ந்து பேசும் என மாடலிங், பேஷன் ஷோவில் கலக்கும் கோவை மாடல் கவிதா பேசுகிறார்...
''கல்லுாரி படிக்கும் போதே மாடலிங் ஆர்வம் இருந்தது. படிப்பில் பிஸியாக இருந்ததால் முடியலை. இப்போ இன்ஜினியரிங் படிச்சிட்டு ஐ.டி., கம்பெனயில் வேலை பார்க்கிறேன். சரி மாடலிங் பக்கம் களமிறங்குவோம்னு வந்துட்டேன். பிரைடல், காஸ்ட்யூம், மேக்கப், ஜூவல்லரி மாடலிங் போட்டோ ஷூட் பண்ணிட்டு இருக்கேன்.
நிறைய பேர் 'நீ சீரியல் நடிகை ஸ்ரீநிதி மாதிரி இருக்கே'னு சொல்வாங்க. நடிகை ரேஞ்சுக்கு இருக்கோம்னு தன்னம்பிக்கையுடன் பேஷன், ரேம்ப் வாக் ஷோ பண்ண ஆரம்பிச்சிருக்கேன். முதன் முதலாக கோவையில் ஸ்டைலன் ஷோவில் செகண்ட் ரன்னர் அப் வாங்கினேன். அது சந்தோஷத்தை கொடுத்தது.
சென்னையில் நடந்த மிஸ்டர், மிஸ்ஸர்ஸ் கிரான்ட் தமிழ்நாடு ஷோவில் 'மிஸ் கிரான்ட் நார்த் ஸோன் ஆப் தமிழ்நாடு' என்ற டைட்டில் வின் பண்ணினேன். எனக்கு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தான் ரோல் மாடல். அவங்களை பார்த்து, பார்த்து தான் மாடல், பேஷன் கத்துகிட்டேன்.
அப்புறம் 'நீ ரொம்ப 'ஹோம்லி'னு வேற எல்லாம் சொல்றதால சாரி மாடலிங் ஷூட் தான் நிறைய வருது. அதுவும் சரி தான் என்ன மாடர்ன் டிரஸ் பண்ணினாலும் சாரி மாதிரி வராது. சாதாரணமாக சாரி கட்டினால் கூட கிளாமர் லுக் கொடுக்கும். இதோடு பரதம், கர்நாடக சங்கீதம் எல்லாம் கூட தெரியும். நல்ல சீரியல், சினிமா வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்
ஒவ்வொரு பேஷன் ஷோவா ஜெயித்து 'மிஸ் இந்தியா' டைட்டில் வாங்குறது தான் என் லட்சியம். இன்றைய பெண்களுக்கு பேஷன் உலகம் புதிய நம்பிக்கை, தைரியத்தை கொடுத்திருக்கு அதனால் கண்டிப்பாக நானும் சாதிப்பேன்'' என்றார்.