கூடலுார்:கூடலுார் தேவன் தனியார் எஸ்டேட் பகுதியில், நஞ்சுண்டன் என்பவர் நேற்று முன்தினம், பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
அப்பகுதிக்கு சென்று பார்த்த போது, புலி தாக்கி மாடு இறந்து கிடந்தது தெரிய வந்தது. வனச்சரகர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
மாட்டின் உரிமையாளருக்கு நிவாரணமாக, 30 ஆயிரம் ரூபாயக்கான காசோலையை உதவி வன பாதுகாவலர் கருப்பையா வழங்கினார். இந்த சம்பவத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement