பெங்களூரு-அமைச்சர் எம்.பி.பாட்டீலை, துணை முதல்வர் சிவகுமார் 'நோஸ் கட்' செய்தார்.
பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள, காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. துணை முதல்வர் சிவகுமார் மைக்கில் பேசினார்.
அப்போது மேடையில் இருந்த முதல்வர் சித்தராமையாவிடம், அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார். அப்போது திடீரென பேசுவதை நிறுத்திய சிவகுமார், எம்.பி.பாட்டீலை பார்த்து 'ஒரு நிமிடம், நான் பேசி கொண்டு இருக்கிறேன்; இடைஞ்சல் செய்யாதீர்கள்' என்று, கூறினார்.
அதற்கு எம்.பி.பாட்டீல், ஏதோ சொல்ல வந்தார். ஆனால் அதை சிவகுமார் கண்டுகொள்ளவில்லை. மேடையில் வைத்து தன்னை, 'நோஸ் கட்' செய்ததால், எம்.பி.பாட்டீலின் முகம் மாறிப் போனது. சிவகுமார் பேசி முடிக்கும் வரை, அவர் அமைதியாக இருந்தார்.