விஜய்யின் 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக முன்னதாக தகவல் கசிந்தது. லியோ படத்தை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகக் கூறப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் இப்படம் வெளியாவது உறுதியானது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் வழக்கம்போல படத்தின் அப்டேட் கேட்டு இணையத்தில் விவாதம் மேற்கொண்டனர். விஜய் ஆண்டனி நடித்து முன்னதாக வெளியான பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, அதன் இடைவேளையில் விஜய் 68 பட ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது.
ஆங்கில குறுக்கெழுத்துப் புதிர் ஒன்று திரையில் தோன்ற, அதில் விஜய் என்னும் குறுக்கெழுத்தை பேனா கொண்டு யாரோ வட்டமிடுவதுபோலக் காட்சி ஒன்று வெளியானது. திரையரங்கில் இதனைக்கண்ட விஜய் ரசிகர்கள் ஆரவாரமிட்டதுடன் அதனை வீடியோ எடுத்து டிவிட்டரில் வெளியிட்டனர். இதனையடுத்து தற்போது
thalapathy 68 என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
![]()
|
வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பத்து மாதங்களுக்கு முன்னர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் படம் தொடர்பான அப்டேட் லியோ வெளியான பின்னரே அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.