இன்று அமெரிக்க மெட்டா தொழில்நுட்ப நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டா, வாட்சாப் உள்ளிட்ட தளங்கள் உலக ஸ்மார்ட்போன் பயனாளர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. விளம்பரங்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டும் தளங்களுள் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது.
இந்தியாவில் சீன குறுவீடியோ செயலியான டிக் டாக் முடக்கத்துக்குப் பின்னர் இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் குறுவீடியோ செயலி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுவருகிறது.
இன்ஸ்டாகிராம் செயலி தற்போது ஓவியர்கள், இசைக் கலைஞர்கள், பேராசிரியர்கள், சிற்பக் கலைஞர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் விளம்பர செயலியாக விளங்குகிறது. ஆன்லைன் வர்த்தக தளங்கள் பலவற்றின் விளம்பரங்கள் மூலம் இன்ஸ்டாகிராம் பல மில்லியன் டாலர் ஆண்டு வருமானம் ஈட்டிவருகிறது.
ஒரே நேரத்தில் இன்ஸ்டாகிராம் பல கோடி உலக குடிமக்களால் பயன்படுத்தப்படுவதால் அவ்வப்போது மென்பொருள் இடற்பாடு ஏற்படுகிறது. இதனை மெட்டா நிறுவன மென்பொறியாளர்கள் அவ்வப்போது சோதனை செய்து பக்-களை நீக்கி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் செயலி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயனாளர்களுக்கு முடங்கியது.
![]()
|
அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இன்ஸ்டா பயனாளர்களும் கனடாவில் 24 ஆயிரம் பயனாளர்களும் பிரிட்டனின் 50 ஆயிரம் பயனாளர்களும் இதனால் செயலியை இயக்கமுடியாமல் பாதிப்படைந்தனர். சில மணிநேர செயலி முடக்கம் மெட்டா நிறுவனத்துக்கு பல ஆயிரம் டாலர் நஷ்டத்தை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயலி முடக்கம் சில மணிநேரத்தில் சரி செய்யப்பட்டதாக இன்ஸ்டா தரப்பு கூறுகிறது. இதேபோல முன்னதாக மெட்டா நிறுவனத்தின் வாட்சாப், பேஸ்புக் செயலிகளும் சில மணிநேரங்கள் முடங்கி வாடிக்கையாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.