கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அடுத்த, பன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைகண்ணு, 70. வீட்டை பூட்டிக் கொண்டு தாம்பரத்தில் உள்ள மகன் வீட்டில் சில காலம் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் பன்பாக்கம் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இடைப்பட்ட காலத்தில், மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று, மிக்சி, கிரைண்டர், குக்கர், கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை திருடி சென்று உள்ளனர்.
கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.