தங்கவயல்,--பழுது பார்ப்பு பணிகளை மேற்கொள்வதால், தங்கவயலில் இன்று மின் தடை செய்யப்படுகிறது.
மின்துறை செயற்பொறியாளர் அறிக்கை:
உரிகம் பேட்டை பகுதியில் மின் கேபிள்கள் மாற்றும் பணிகள், இன்று நடக்கிறது. இதனால் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
உரிகம் பேட்டை நேரு பள்ளி அருகில் மின் கேபிள்கள் மாற்றும் பணிகள் நடப்பதால், உரிகம் பேட்டை, மஞ்சுநாத் நகர், சாமிநாத புரம், அசோகா நகர், கென்னடிஸ் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.