சென்னை, சென்னை மாவட்ட வலு துாக்கும் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான வலு துாக்கும் போட்டி, அம்பத்துாரில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், 'பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட், ஸ்குவாட்' ஆகிய முறையில், 'அன் எக்யூப்ட், எக்யூப்ட்' ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, 70க்கும் மேற்பட்ட மாஸ்டர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், 105 கிலோ எடை பிரிவில், அயனாவரத்தைச் சேர்ந்த சம்பத் இரு பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்று, சாதனை படைத்துள்ளார்.
அனைத்து போட்டிகள் முடிவில், அயனாவரத்தில் உள்ள நவீன் பிட்னஸ் உடற்பயிற்சி நிலையம், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.