கள்ளக்குறிச்சி: மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்திற்கு, கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., செயற்குழுவில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாடூர் ஏ.என்.பி., மகாலில் நடந்தது. மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேலுபாபு, பிரபு, பரமசிவம், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார்.
கூட்டத்தில், மதுரையில் ஆக., 20ல் நடக்கும அ.தி.மு.க., மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்பது, தொகுதிக்கு 70 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான தி.மு.க., அரசை கண்டிப்பது. தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராயம், கஞ்சா, பாலியல் வன்முறைகள், நில அபகரிப்பு, போதை பொருட்கள் அதிகரித்துள்ளதை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, வழக்கறிஞரணி செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அய்யம்பெருமாள், கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், எஸ்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, மணிராஜ், செண்பகவேல், சந்திரன், ஏகாம்பரம், ராமலிங்கம், சந்தோஷ், பழனிச்சாமி, பழனி, நகர செயலாளர்கள் ஷியாம்சுந்தர், ராகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.