ஆவடி,
திருவள்ளூர், காக்களூர், சுமத்திரா நகரைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி, 43; தனியார் நிறுவன ஊழியர்.
இவர், நேற்று மாலை 3:45 மணி அளவில், பெரம்பூரில் இருந்து நெமிலிச்சேரி வெளிவட்ட சாலை வழியாக, தன் 'டாடா டியாகோ' காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வெள்ளச்சேரி அருகே முன்பக்க டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக சத்யமூர்த்தி, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து பட்டாபிராம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.