அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அமைதியாக நடைபெற தேர்தல் கமிஷனர் வேண்டுகோள்

Updated : அக் 16, 2011 | Added : அக் 16, 2011
Share
Advertisement

சென்னை : மாநில தேர்தல் கமிஷனர் அய்யர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு நாளை காலை, 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில், நகர்ப்புறத்தில், 1 கோடியே, 37 லட்சத்து, 97 ஆயிரத்து, 898 வாக்காளர்களும், கிராமப்பகுதிகளில், 1 லட்சத்து, 32 ஆயிரத்து, 929 வாக்காளர்களும் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக, நகரங்களில், 17 ஆயிரத்து, 690 மற்றும் கிராமங்களில், 30 ஆயிரத்து, 681 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள், மாநிலத் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள புகைப்படம் ஒட்டிய, வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து ஓட்டளிக்கலாம்.தேர்தலை அமைதியாக நடத்த, அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X