விழுப்புரம் : மயிலம் அருகே தனது மகன் சொத்தை அபகரித்தக் கொண்டதாக, மூதாட்டி கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
மயிலம் அடுத்த கொரளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மனைவி சரோஜா, 65; விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
மயிலம் அடுத்த கொரளூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் சின்னையன், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
எனது கணவருக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தை, நான் பராமரித்து வந்த நிலையில், சொத்துக்களை தான் பராமரித்துக் கொள்வதாக எனது மூத்த மகன் கேட்டார்.
மேலும், மாற்றுத் திறனாளியான எனது இளைய மகனையும் என்னையும் கவனித்துக் கொள்வதாக கூறி, சொத்துக்களை எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில், எனது கணவருக்கு சொந்தமான நிலம் உள்ளிட்ட சொத்துக்களை, தன்னிச்சையாக விற்பனை செய்ய முயன்று வருகிறார்.
மேலும், கணவர் இறந்த நிலையில், இளைய மகனை பராமரிக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறேன்.
எனது இழந்த சொத்துக்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.