திருவொற்றியூர்ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கமல்கான்செட்டி, 37, திருவொற்றியூர், சடையாங்குப்பத்தில் தங்கி வேலை பார்க்கிறார்.
இப்பகுதியில் நேற்று அதிகாலை, மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார். அவ்வழியே வந்த இருவரை, அவரது மொபைல் போனை பறித்து தப்பினர்.
சாத்தங்குப்பம் போலீசார் விசாரித்து, வழிப்பறியில் ஈடுபட்ட பர்மா நகர் சக்திவேல், 23, தேவராஜ், 21, ஆகிய இருவரையும், நேற்று காலை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, மொபைல் போன் மற்றும் 'யமஹா' இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.