குன்றத்துார்,
வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட அணுகு சாலையில், குன்றத்துார் அருகே, 50க்கும் மேற்பட்ட வெங்காய மூட்டைகள் சாலை ஓரத்தில் கிடந்தன.
அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இதைப் பார்த்து, போட்டி போட்டுக் கொண்டு வெங்காய மூட்டைகளை இரு சக்கர வாகனங்களில் கொண்டு சென்றனர். ஒரு சிலர், மூன்று முதல் நான்கு மூட்டைகளை, இருசக்கர வாகனத்தில் சர்வ சாதாரணமாக எடுத்துச் சென்றனர்.
வெங்காய மூட்டைகள் குறித்து யாரும் கேட்காததால், சில நிமிடங்களில் மொத்த வெங்காய மூட்டைகளும் காலியாகின. வெங்காய மூட்டைகளை வீசிவிட்டுச் சென்றது யார், எதனால் வீசிச் சென்றனர் என்பது குறித்து, குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.