புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கட்டண விகிதம் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு, 'www.tangedco.org' இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் வாயிலாகவே அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்வதுடன், கட்டணத்தையும் செலுத்த வேண்டும். அதை அதிகாரிகள் இணையதளம் வாயிலாகவே பரிசீலித்து, சேவைகளை செய்து கொடுப்பர். சிலர் லஞ்சம் பெற, ஆவணங்களின் நகல்களை அலுவலகத்திற்கு எடுத்து வருமாறு விண்ணப்பதாரர்களிடம் கூறுகின்றனர்.
இதை தடுக்க, 'அலுவலகத்திற்கு நகல்களை எடுத்து வர வேண்டாம்' என, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.