நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே பெற்றோர்கள் திட்டியதால் வாலிபர் பூச்சி மருந்து குடித்து இறந்தார்.
நடுவீரப்பட்டு அடுத்த ஒதியடிக்குப்பம் தெற்குதெருவை சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவரது மகன் தனுஷ்,20; இவர் கடந்த ஆண்டு கடலுார் அரசு கல்லுாரியில் சேர்ந்து படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இதனை பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி நிலத்தில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு ஆபத்தான நிலையில் தமது நண்பருக்கு வாட்ஸ்அப் மூலம் காப்பாற்றுங்கள் என செய்தி அனுப்பினார்.
உடன் உறவினர்கள் தனுஷை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.