கடலுார்: திருநாவலுார் அன்னை தெரேசா பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கல்லுாரி தாளாளர் பிரகாஷ்மல் சோரடியா தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் திணேஷ்குமார் சோரடியா, முதல்வர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவி வடிவுக்கரசி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் பெங்களூரு குவால்கம் இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் டெவலப்பராக பணிபுரிபவரும், கல்லுாரியின் முன்னாள் மாணவருமான ஆசைதம்பி பேசினார். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.மாணவி சித்ரா நன்றி கூறினார்.