சென்னை: கருணாநிதி நுாற்றாண்டு விழாவை, அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டா டுவது குறித்து, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மாதந்தோறும், ஒவ்வொரு பொருளின் அடிப்படையில்,கருணாநிதி நுாற்றாண்டு விழாக்களை நடத்தலாம். அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக்களாக, இவற்றை நடத்த வேண்டும்.
இதில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, முக்கிய பங்காற்ற வேண்டும்.
அரசு நடத்துவதாக மட்டுமல்லாமல், பல்கலைகள், கல்லுாரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாக, அது அமைய வேண்டும். இது குறித்த விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.