பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சியில், பணிப்புரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசின் நலவாரிய கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசின் நலவாரிய கார்டை வழங்கினார். செயல் அலுவலர் திருமூர்த்தி, கவுன்சிலர் இராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மா.கம்யூ., வடக்கு ஒன்றிய செயலர் விஜய், நகர செயலர் வேல்முருகன், சிறுபான்மை பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் அசன் முகமது மன்சூர், சி.ஐ.டி., கட்டுமான தொழிற்சங்கத் தலைவர் தனசேகரன், சுகாதார ஆய்வாளர் ஜோதி, சுகாதார மேற்பார்வையாளர்கள் வீரானந்தம், சுதாகர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.