மதுரை,-திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள் பூங்கொடி, 40. இவருக்கு மகள், மகன் உள்ளனர். இவரது உடன்பிறந்த சகோதரி விஜயலட்சுமி, 37; திருமணம் ஆகாதவர். இருவரும் சமையல் வேலைக்கு சென்று வந்தனர்.
நேற்று முன்தினம், மதுரை மாவட்டம், ஒத்தக்கடை நரசிங்கம் யோக நரசிங்க பெருமாள் கோவிலுக்கு வந்தனர். அப்போது இருவரும் நரசிங்கத்தில் உள்ள கல் குவாரியில் தேங்கிய நீரில் குளித்தபோது மூழ்கி இறந்தனர்.
அவர்களது அலறல் சத்தத்தை கேட்ட சிறுவன், பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தான். தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு, நேற்று காலையில் சகோதரிகள் இருவரின் உடல்களை மீட்டனர்.