ஆண்டிபட்டி, : கோத்தலூத்து ஊராட்சியில் உள்ள பூங்காவில் மரம், செடி, கொடிகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோத்தலூத்து கிராமத்தில் நாகலாறு ஓடையை ஒட்டி உள்ள பகுதியில் 2 ஏக்கர் பரப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட பல வகை மரங்கள், மூலிகைச் செடிகள் பூங்காவில் நடப்பட்டு தற்போது வளர்ந்த நிலையில் உள்ளன.
இந்நிலையில் போதிய பராமரிப்பு இன்றி பூங்கா புதர் மண்டியும், மரம் செடி கொடிகள் காய்ந்தும் வருகிறது.
தன்னார்வலர்கள் அவ்வப்போது பூங்கா பராமரிப்புக்கு வந்து சென்றாலும் நிரந்தரமான ஆட்கள் இல்லை.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பூங்காவில் பணி மேற்கொள்ளவும், பூங்காவை தொடர்ந்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.