ராமநாதபுரம், ; பார்த்திபனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மே தினத்தை முன்னிட்டு ஸ்போர்ட்டானா அகாடமி சார்பில் ஓவியப் போட்டி நடந்தது. மாணவர்களுக்கு முகமது சதக் தஸ்தகீர் கல்லூரியில் பரிசளிப்பு விழா நடந்தது.தேசிய குறும்பட விருது பெற்ற நா.கலையரசன் சான்றிதழ் வழங்கினார்.
கல்லுாரி விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் புனிதம், வானொலி கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லியான், மாலா, சிவானந்தம் பங்கேற்றனர்.