ராமேஸ்வரம், ; கடல் பசுவை பாதுகாக்க கோரி ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் வரை வனத்துறையினர் டூவீலரில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
மன்னார் வளைகுடா கடலில் ஏராளமான அரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன. இங்குள்ள கடல் பசு, கடல் வாழ் உயிரினம், நமது கடல் வளத்தை பாதுகாக்க கோரி ராமநாதபுரம் மண்டல பல உயிரினம் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் சார்பில் நேற்று ஊர்வலம நடந்தது.
ராமேஸ்வரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தேசிய நினைவகம் முன்பு துவங்கிய ஊர்வலத்தை ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை உதவி கமாண்டர் நரேந்திரசிங் கொடி அசைத்து துவக்கினார்.
இதில் மண்டபம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல்காதர் ஜெயிலானி உட்பட பலர் பங்கேற்றனர்.