மீண்டும் பிரதமராக மோடி வந்தால் அனைவரும் பணக்காரர்கள் ஆகலாம் என்ற முன்னாள் எம்.எல்.ஏ.,பேசினார்.
விழுப்புரம் அடுத்த முகையூர் ஒன்றியம், புத்துார் கிராமத்தில், நேற்று முன்தினம் பா.ஜ., திண்ணை பிரசாரம் நடந்தது.தெற்கு மாவட்ட தலைவரான முன்னாள் எல்.எல்.ஏ., கலிவரதன் பேசுகையில், 'நாட்டில் லஞ்சம், கமிஷன் வாங்காத பிரதமராக மோடி உள்ளார்.
அவர் மூன்றாவது முறையாக பிரதமராக வர ஆதரவு கேட்கிறோம். நீங்க ஓட்டு போட்டாலும், போடவில்லை என்றாலும், அவர் பிரதமராக வந்து விடுவார்.நாம அவரை ஓட்டு போட்டு பிரதமராக ஆக்கினால், தமிழ்நாட்டிலும் பா.ஜ., வைச் சேர்ந்தவர் முதல்வராக வருவார். அப்படி நடந்தால், மத்தியில் இருந்து கிடைக்கும் நிதி முழுமையாக தமிழ்நாட்டுக்கு கிடைக்கும். அதன் மூலம் நீங்கள் எல்லாரும் பணக்காரர்களாக முடியும்.
நீங்க எல்லாரும் பணக்காரர்களாக ஆக வேண்டும் என்றால் பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டும்' என்றார்.