புதுச்சேரி : நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் பழைய காலனியை சேர்ந்தவர் நாகரத்தினம். இவரது மகன் அங்காளன், 23; இவர், கடந்த 3 ஆண்டுகளாக வீட்டிற்கு வருவது இல்லை. இவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் சிறையில் இருப்பார் என்றும், தண்டனை காலம் முடிந்த பின் வீட்டிற்கு வருவார் என பெற்றோர் நினைத்திருந்தனர்.
இந்நிலையில் நாகரத்தினம் விசாரித்த போது, அவர் சிறையில் இல்லை என்பதும், தொடர்ந்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நாகரத்தினம் அளித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, அங்காளனை தேடி வருகின்றனர்.இவரைப்பற்றி தகவலறிந்தவர்கள், 0413 2699426, 2699999, 2665100 ஆகிய தொலைபேசி எண்களில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.