புதுச்சேரி: இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை, புதுச்சேரி சர்க்கரை நோய் ஆராய்ச்சி குழுமம், தமிழ்நாடு நாளமில்லா சங்கம் சார்பில், ஒரு நாள் சர்க்கரை நோய் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
ஓட்டல் அக்கார்டில் நடந்த கருத்தரங்கிற்கு புதுச்சேரி சர்க்கரை நோய் ஆராய்ச்சி குழுமத் தலைவர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.
இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை தலைவர் விஜய ஓசா, செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு நாளமில்லா சங்க தலைவர் குமார வேல், பேராசிரியர் அசோக்குமார் தாஸ் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் சர்க்கரை நோயின் தற்போதைய போக்கு, மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றம் குறித்து விவாதிக்கப்படடது.
புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்று சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமாரவேல் நன்றி கூறினார்.