தந்தை, 2 மகன்கள் தற்கொலை
ராய்ச்சூர் மாவட்டம், சிர்வார் டவுனைச் சேர்ந்தவர் முதகப்பா, 60. இவரது மகன்கள் சிவா, 23, பசவராஜ், 2-0. நேற்று மாலை தந்தை, மகன்கள் சிர்வார் டவுனில் உள்ள, ஏரியில் பிணமாக மிதந்தனர். மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறில், ஏரியில் குதித்து மூவரும் தற்கொலை செய்தது தெரிந்தது. வேறு காரணம் உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.
விபத்தில் தம்பதி பலி
பீதர் மாவட்டம், பசவகல்யாண் தாலுகா, சஸ்தாபூர் கிராமத்தில் வசித்தவர் குந்தப்பா, 33. இவரது மனைவி சுஜாதா, 29. நேற்று மதியம் ஜோகேவாடி என்ற கிராமத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை வழியாக பைக்கில் சென்றனர். அந்த வழியாக வேகமாக வந்த, அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. துாக்கி வீசப்பட்ட தம்பதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.