திடீரென யாராவது நம்முன் வந்து 'ஹாய்..! ஹவ் ஆர் யூ?' என ஆங்கிலத்தில் நலம் விசாரித்தால் நம்மில் பெரும்பாலானோர் கூறும் வார்த்தை 'ஃபைன்' அல்லது 'குட்'. இந்த இரண்டு வார்த்தைகளைக் காட்டிலும் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஏராளமான ஆங்கில வார்த்தைகள் இந்தக் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளன. அவை என்னென்ன, நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப் பொருத்து அவற்றை சரியாகப் பிரயோகிப்பதெப்படி எனப் பார்ப்போமா?
நன்றாக இருக்கிறீர்களா என யாராவது கேட்கும்போது நாம் நன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சில சமயங்களில் நாம் சோர்வாகவோ, சில சமயங்களில் பதற்றமாகவோ அல்லது கோபமாகவோ, அதிருப்தியிலோ, வருத்தமாகவோ இருக்கலாம். எனவே ஆங்கிலத்தில் ஹவ் ஆர் யூ எனக் கேட்டால் நம் மன உணர்ச்சிகளைப் பொருத்து நாம் இவ்வாறு பதிலளிக்கலாம்.
ஹவ் ஆர் யூ என்கிற கேள்விக்கு குட் என்பதே பெரும்பாலானோர் சொல்லும் பொதுவான பதில். இதற்கு பதிலாக வெல் என்றும் கூறலாம்.
மிகவும் நன்றாக உணர்ந்தால் வெரி வெல் எனக் கூறலாம்.
நெருங்கிய நண்பரிடம் கிரேட் எனக் கூறலாம்.
![]()
|
அதிகம் பரிச்சயம் இல்லாத நபர் என்றால் ஆல் ரைட் எனக் கூறலாம்.
வாழ்க்கை ஏதோ போய்க்கொண்டிருக்கிறது எனக் கூறுவதற்கு நாட் பேட் எனக் கூறலாம்.
வாழ்க்கை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்கிற அங்கலாய்ப்பை வெளிப்படுத்த 'ஐ ஹேவ் பீன் பெட்டர்' என்கிற வாக்கியத்தைப் பயன்படுத்தலாம்.
வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்த எக்சைட்டட் எனக் கூறலாம்.
வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் கச்சிதமாக சென்று கொண்டிருக்கின்றன எனக் கூற 'ஃபிட் ஆஸ் ஏ ஃபிடில்' (fit as a fiddle) எனக் கூறலாம். ஃபிடில் என்பது வயலின் இசைக்கருவியின் மற்றொரு பெயர். இந்த வயலினில் தந்திகளை இழுத்துக் கட்டி அதில் ஸ்ருதி ஏற்றுவர். வயலின் தந்திகள் எவ்வாறு இழுத்தக் கட்டப்பட்டு ஃபிட்டாக உள்ளனவோ அதேபோல நமது வாழ்க்கையும் ஃபிட்டாக உள்ளது என்பதைக் குறிக்கவே 'ஃபிட் ஆஸ் ஏ ஃபிடில்' எனும் வாக்கியம் பயன்படுகிறது.