மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்வாய்ந்த சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழக கவர்னர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காண்பித்து முழக்கம் எழுப்பிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன், மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் விஜய் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.