டிவிட்டருக்கு செக் வைக்க இன்ஸ்டா பலே திட்டம்?

Updated : மே 23, 2023 | Added : மே 23, 2023 | |
Advertisement
டிவிட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.மக்களிடம் சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற புகழ்பெற்ற மூன்று முக்கிய சமூக வலைதளங்கள் மூலம், மக்கள் தங்களது, கருத்துக்கள், மீம்ஸ், படங்கள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன்
Instagrams Twitter-rival text-based app may launch next monthடிவிட்டருக்கு செக் வைக்க இன்ஸ்டா பலே திட்டம்?

டிவிட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

மக்களிடம் சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற புகழ்பெற்ற மூன்று முக்கிய சமூக வலைதளங்கள் மூலம், மக்கள் தங்களது, கருத்துக்கள், மீம்ஸ், படங்கள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் எளிதாக பகிர்ந்துகொள்கின்றனர். இந்த நிறுவனங்களும் பயனர்களின் தேவைக்கேற்ப அவ்வபோது அதன் செயலிகளில் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் டிவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் அட்டகாசமான அம்சம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.



latest tamil news


இன்ஸ்டாகிராம் செயலியில் மெசேஜ் செய்யும் அம்சம் இருந்தாலும் படங்கள், வீடியோக்கள் பதிவேற்றும் செயலியாகவே பயன்படுத்தப் பட்டு வருகிறது. குறிப்பாக ரீல்ஸ் அம்சம் வந்த பின் இன்ஸ்டாகிராம் ஒரு முழு நேர ரீல்ஸ் பகிரப்படும் செயலியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் Text-ஐ மையமாகக் கொண்டு ஒரு புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news


இந்த புதிய செயலி மூலம் பயனர்கள் 1,500 வார்த்தைகள் வரை டைப் செய்ய முடியும் என்றும், லிங்குகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணைத்துக் கொள்ளலாம். இதுதவிர இன்ஸ்டா பயனர்கள் தங்களது இன்ஸ்டா கணக்கு மூலம் இந்த புதிய செயலியை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலி வரும் ஜூன் மாதம் அறிமுகப் படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது..

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X