நிரம்பி வழியும் குடிநீர்
திருவாலங்காடு ஊராட்சி பாஞ்சாலி நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மக்களின் குடிநீர் தேவைக்காக அதே பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியில் ஒவ்வொரு முறையும் குடிநீர் நிரம்பி வழிந்தபடி உள்ளது.
இதனால் குடிநீர் வீணாவதுடன், மின்சாரமும் வீணாகி வருகிறது. தடுக்க ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--கே. மகேஷ், திருவாலங்காடு.