உளுந்தூர்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே திருநாவலுார் கிளை நூலகத்தில் கோடை விடுமுறையையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு கேரம் போர்டு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
சமூக ஆர்வலர் முருகன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் நிலை நுாலகர் சசிகுமார் வரவேற்றார். பயிற்சியின்போது மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்தமாட்டோம் என்றும், பள்ளி விடுமுறை நாட்களில் தவறாமல் நுாலகத்திற்கு வந்து படிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.