விழுப்புரம் : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், விழுப்புரம் நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து சாதித்தனர்.
இப்பள்ளி மாணவி அன்பரசி 500க்கு 470, மாணவர் நிரஞ்சன் 469, மாணவி இனியா 468 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
பாடம் வாரியாக, தமிழில் 7 பேர், ஆங்கிலத்தில் 22 பேரும், கணிதத்தில் 8 பேரும், அறிவியலில் 15 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 7 பேரும் 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்துள்ளனர். தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் வீரதாஸ் பாராட்டினார்.
நிர்வாக அதிகாரி டாக்டர் எமர்சன் ராபின், கல்வி குழு தலைவர் சுகன்யா, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.