கூகுள் பே யூசர்களுக்கு குட் நியூஸ்!

Updated : மே 23, 2023 | Added : மே 23, 2023 | |
Advertisement
கூகுள் பே செயலியில் இப்போது ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நாட்டில் பணப்பரிவர்த்தனை வசதி மிக எளிதாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற ஏராளமான UPI செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள்
Google Pay brings RuPay credit card-based UPI paymentsகூகுள் பே யூசர்களுக்கு குட் நியூஸ்!

கூகுள் பே செயலியில் இப்போது ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



நாட்டில் பணப்பரிவர்த்தனை வசதி மிக எளிதாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற ஏராளமான UPI செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். இதன்மூலம் மளிகை கடை முதல் உயர்தர வணிகம் வரை அனைத்துக்கும் எளிதாக ஸ்கேன் செய்து பணம் அனுப்பமுடியும்.



latest tamil news


இதுவரை கூகுள் பே செயலியில் வங்கி கணக்கு இணைக்கும் போது டெபிட் கார்டு பயன்படுத்தி மட்டுமே இணைத்து வந்தநிலையில் கூகுள் பே செயலியில் இப்போது ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


தற்போது ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் ரூபே கிரெடிட் கார்டுகளை கூகுள் பே செயலி ஆதரிக்கிறது. அதேபோல் இனி வரும் நாட்களில் மேலும் சில வங்கி கார்டுகளை இணைக்க கூகுள் பே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விசா மற்றும் மாஸ்டர் வழங்கிய கிரெடிட் கார்டுகளை தற்போது இணைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி இணைப்பது?

முதலில் கூகுள் பே ஓபன் செய்து settings பக்கம் செல்ல வேண்டும். அடுத்து Setup payment method செலக்ட் செய்து Add ரூபே கிரெடிட் கார்டு ஆப்ஷனை கிளிக் செய்யவும்.



latest tamil news


அதன்பின் கிரெடிட் கார்டு விவரங்கள், 6 இலக்க கிரெடிட் கார்டு எண், எக்ஸ்பைரி டேட், பின் நம்பர் ஆகியவை கொடுத்த பின் ஓ.டி.பி வரும்.



latest tamil news


ஓ.டி.பி பதிவிட்டபின்பு கூகுள் பே செயலியில் உங்கள் கிரெடிட் கார்டு இணைக்கப்பட்டுவிடும். அதன்பிறகு பணம் செலுத்தும் போது ரூபே கிரெடிட் கார்டு என்ற ஆப்ஷனையும் செலக்ட் செய்து பணம் செலுத்திக்கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X